பாதித்த புத்தகம்
சுஜாதாவின் ஆதி தீவிர ரசிகை நான். என்னை மிகவும் பாதித்த இரு புத்தகங்கள் “என் இனிய இயந்திரா” மற்றும் “மீண்டும் ஜினோ” ஆகும். தமிழில் இவ்வளவு அழகாக பிக்சன் கதைகள் எழுத முடியுமா என்று என்னை பிரமிக்கவைத்த நூல்கள் இவை.
பிடித்த படம்
ரோஜா – மூன்று விசையன்களுக்காக இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது. சுஜாதா ( வசனம் ), மதுபாலா, தேசப்பற்று. ரொம்ப ரொமாண்டிகான படமும் கூட.
இசை ஆல்பம்
இளையராஜா, ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா பாடல்கள் அனைத்தும் பிடித்த பாடல்கள் ஆகும். பிடித்த பாடகர்கள் யேசுதாஸ், மலைசிய வாசுதேவன், SPB, ஜானகி, அநுராதா ஸ்ரிராம், கமல்ஹாசன், சங்கர் மஹாதேவன், ஹரிஹரன், “Sounds of Isha” இசை ஆல்பம் எல்லாம் என்றும் என் மனத்திற்கு நெருங்கியவை.
பிடித்த இடம்
அக்கிநிஶ், தென் ஆப்பிரிக்கா. 10 வருடங்களுக்கு அப்புறம் நான், என் கணவர், என் பையன் என்று மூன்று பேர் மட்டும் அனுபவித்த சந்தோசத் தருணங்களைக் கொடுத்த இடம் என்பதாலும், இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடம் என்பதாலும் என்னை கவர்ந்தது.
கனவுப் பயணம்
கெயிரோ, ஈஜிப்ட். பிரமிடுகள் என்னை எப்பொழுதும் பிரமிக்க வைப்பவை. உலக அத்ிசியங்களில் ஒன்று என்பதால் மட்டும் அல்ல, அறிவியல் அத்ிசியங்களில் ஒன்று என்பதாலும்.